மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டி பெரஹராவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு இது மிகவும் இலகுவான மையமாக விளங்குவதால் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு மக்கள் அஞ்சுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே சபை முதல்வர் கண்டி பெரஹராவின் பாதுகாப்பு தொடர்பில், அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
பல நூற்றாண்டுகளாக நாட்டில் இடம்பெறும் கண்டி பெரஹராவை நடத்தாமலிருக்க முடியாது. ஆனால் இதற்கு நாலா பக்கத்திலிருந்தும் வரும் மக்களை சோதனையிடுவது சாத்தியமாகாது.
இந்நிலையில் மக்களின் மனதிலுள்ள அச்சத்தைக்களையும் வகையில் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.
ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment