தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இன்று (04) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இவ்வருட ஆரம்பத்தில் ஜனாதிபதியால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த வாரத்திற்குள் ஆளுநர் பதிவியை இராஜினாமா செய்யும் மூன்றாவது ஆளுநராக கீர்த்தி தென்னக்கோன் உள்ளார்.
ஏற்கனவே மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன மற்றும் ஊவா மாகாண ஆளுநர் மார்ஸல் பெரேரா ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment