சில இனவாதிகள் இணைந்து நாட்டில் பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தமையினால் எமது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கருதியே பதவிகளை துறந்தோம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (02) மாலை இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமான், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் எதிர்வரும் தேர்தல் எமது சமூகத்துக்கு வாழ்வா? சாவா? என்றுதான் இருக்கும் சரியான முடிவுகளை எடுத்து சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் தான் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும்.
நாட்டின் நிலையான சட்டம் ஓழுங்குகளை கடைப்பிடித்து ஆட்சியை கொண்டு செல்லக்கூடிய நாட்டுத் தலைமை தெரிவு செய்யப்பட வேண்டும் அப்போதுதான் சுதந்திரமாகவும் உரிமைகளோடும் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியும்.
எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எல்லோருக்கும் எல்லா இனங்களுக்கும் பொதுவான கட்சி இனபேதமற்ற முறையில் இருப்பதனால் தான் தற்போது வடபுலத்தில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் உள்ளூராட்சி சபைகள் ஊடாக உறுப்பினர்களாக கட்சியின் வளர்ச்சிக்காகவும் ஈடுபட்டு அங்கம் வகித்து வருகிறார்கள்.
சிறுபான்மை கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டியதொரு காலகட்டமாக இன்றைய காலம் மாறியிருக்கிறது அமைச்சர் றிசாதின் பிரதேசத்தில் உள்ள 32 பௌத்த மதகுருமார்கள் இணைந்து அமைச்சர் றிசாத் செய்த தியாகங்களையும் உண்மை நிலைகளையும் ஊடகங்களுக்கு முன்வந்து கூறியிருக்கிறார்கள் .
பதவிகளை துறந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.
பயங்கரவாத தாக்குதல்களின் பின் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும், டாக்டர் ஷாபியின் விடுதலை, கண்டி திகன குருணாகலில் இடம்பெற்ற இனவாத தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாயல்கள், வீடுகள், வியாபாரத் தளங்களுக்கு நஷ்டஈடுகளை வழங்குதல், மத விழுமியங்களை பாதுகாக்கக் கூடிய சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.
இதில் 2000 க்கும் மேற்பட்டோர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் எதிர்வரும் வாரங்களில் இழப்பீடுகள் வழங்கப்படும் என அரசாங்கம் எம்மவர்களின் கோரிக்கையை ஏற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தெரிவித்ததை அடுத்து சமூகத்தின் விடிவுக்காக மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றிருக்கிறோம்.
அமைச்சர் றிசாட் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருடைய விடயங்களில் நாட்டில் காணப்படும் பாதுகாப்பு துறை, நீதிமன்றம் போன்ற பல விடயங்களிலும் குற்றமற்றவர் என நிரூபனம் செய்துள்ளது முஸ்லிம்களை பயங்கரவாதிகள் எனக் கூறுவோருக்கு அன்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்தவர்களும் எமது சமூகத்தினரே .
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நல்லுறவுடன் சகவாழ்வை நோக்கி இந்த நாட்டில் பயணித்த எம் சமூகம் மீண்டும் நிலையான பாதுகாப்போடு வாழ்வதற்கு உறுதுணையாக இருப்போம்.
மீண்டும் பயங்கரவாதம் அற்ற நிலையை இல்லாமல் ஆக்கி நாட்டில் ஒரு சிறந்த நல்லுறவை வளர்க்கக் கூடியவர்களாக அனைத்து மக்களிடத்திலும் எமது சேவையை கொண்டு செல்லக்கூடிய வகையில் இந்த பதவிகளை கொண்டு செயற்படுவோம் என்றார்.
No comments:
Post a Comment