முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரை அமைச்சுப் பதவிகளை ஏற்க மறுத்த மெளலானாவை நினைத்து பெருமையடைகிறேன் - பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 4, 2019

முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரை அமைச்சுப் பதவிகளை ஏற்க மறுத்த மெளலானாவை நினைத்து பெருமையடைகிறேன் - பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரை அமைச்சுப் பதவிகளை ஏற்க மறுத்த எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானாவை நினைத்து பெருமையடைவதாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமெனும் கோரிக்கைகளை முன்வைத்து கட்சி பேதங்களுக்கப்பால் கூட்டாக இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்களில் ஒரு தொகுதியினர் கடந்த வாரம் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகக்கூறி அமைச்சுப் பதவிகளை அவர்சமாகப் பொறுப்பேற்ற நிலையில், சமூகத்தின் நம்மைகருதி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சைப் பொறுப்பேற்ற நிலையில் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜாங்க அமைச்சுக்களைப் பொறுப்பேற்கவில்லை. 

இந்நிலையில், நேற்று 03.08.2019ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் வீட்டுத்திட்டத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானா கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரச்சினை, கிடைக்க வேண்டிய காணிப்பங்கீடு மற்றும் கோறளைப்பற்று மத்திக்கான புதிய பிரதேச சபை போன்ற விடயங்கள் தீர்க்கப்படாதவரை இராஜாங்க அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கப் போவதில்லையென ஆணித்தரமான கருத்தைத் தெரிவித்திருந்தார். 

சமூகத்தினதும் இப்பிரதேச மக்களினதும் எதிர்கால நன்மைகருதி மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ள செய்யித் அலி ஸாஹிர் மெளலானாவை அக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் மனதாரப் பாராட்டுவதோடு, இதே கொள்கையில் பயணிக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment