நியூஸிலாந்து தாக்குதலுக்கு பதிலடி என தற்கொலைதாரி தொலைபேசியில் கூறுகிறார் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

நியூஸிலாந்து தாக்குதலுக்கு பதிலடி என தற்கொலைதாரி தொலைபேசியில் கூறுகிறார் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்

4/21 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் கிறிஸ்ட் சேர்ச் பள்­ளி­வாசல் துப்பாக்கிச் சூட்டு சம்­பவம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பதி­லடி வழங்கும் முகமாகவே மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பது சங்­கி­ரிலா ஹோட்டல் தற்­கொலைக் குண்­டு­தாரி ஏப்ரல் 21 ஆம் திகதி தனது மனை­வி­யுடன் மேற்­கொண்ட தொலை­பேசி உரை­யா­டல்­க­ளி­லி­ருந்து தெரிய வந்துள்­ளது என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்டத்­ததை நீடிப்­பது தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் சங்­கி­ரி­லா–­ஹோட்டல் தற்­கொலைக் குண்­டு­தாரி தனது மனை­வி­யுடன் தாக்­குதல் நடை­பெ­று­வ­தற்கு முன் மேற்­கொண்ட தொலை­பேசி உரை­யா­டலை ஒட்டுக் கேட்­டதன் கார­ண­மா­கவே இதனை அறிந்­து­கொள்ள முடிந்­துள்­ளது.

அந்த தொலை­பேசி உரை­யா­டலைக் கேட்கும் சந்­தர்ப்பம் எனக்கும் கிடைத்­தது. அந்த உரை­யா­டலில் தற்­கொலைக் குண்டுத்தாக்குதல்தாரி ஏப்ரல் 21 தாக்­குதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதிரான நட­வ­டிக்­கை­க­ளுக்கும் கிறிஸ்ட் சேர்ச் பள்­ளி­வாசல் தாக்குத­லுக்கும் பதி­ல­டி­யா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என தெளி­வாகக் கூறி­யுள்ளார். 

அவர் சிரி­யாவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள், மியன்மாரில் ரோஹிங்யா முஸ்­லிம்­களின் அவ­ல­நிலை தொடர்பாகவும் கதைத்­துள்ளார். இவ்­வா­றான கார­ணங்­க­ளுக்குப் பதி­லடி வழங்கும் முக­மா­கவே தாக்­குதல் மேற்­கொள்­வ­தாக தெளிவாகக் கூறி­யி­ருக்­கிறார்.

சஹ்ரான் குழு­வினர் ஐ.எஸ். அமைப்பின் கொள்­கை­களைப் பின்பற்று­ப­வர்­க­ளாக இருந்­தி­ருக்­கி­றார்­களே தவிர பயங்­க­ர­வாத அமைப்­புடன் நேர­டி­யாக தொடர்­புள்­ளவர்களாக இருந்திருக்கவில்லை’ என்றார்.

மேலும் அவர் உரை­யாற்­று­கையில், பாது­காப்பு அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னைக்­கமைவாக அர­சாங்கம் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. இம்மாதம் (ஆகஸ்ட்) கண்டி எசல பெரஹரா மற்றும் மடு ஆலய உற்சவம் நடைபெறவுள்ளதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

No comments:

Post a Comment