முகைதீன் அப்துல் காதர் வீடமைப்பு திட்டத்தை நாளை திறந்து வைக்கிறார் அமைச்சர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

முகைதீன் அப்துல் காதர் வீடமைப்பு திட்டத்தை நாளை திறந்து வைக்கிறார் அமைச்சர் சஜித்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமத்தின் வீடுகளை பயனாளிகளுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரமேதாசா நாளை சனிக்கிழமை (3) கையளிக்கவுள்ளார்.

நாளை சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ள இவ்வீட்டுத்திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, சபை உறுப்பினர் எம்.பி.ஜவ்பர் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் சென்று பார்வையிட்டார்.
இவ்வீட்டுத்திட்டதில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் குடிநீர்த்திட்டத்திற்கு முப்பது இலட்சம் ரூபாவும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு பதினைந்து இலட்சம் ரூபாவும், வீதி மற்றும் உட்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு பதினைந்து இலட்சம் ரூபாவும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முகைதீன் அப்துல் காதர் மாதிரிக்கிராமமத்தில் ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வீடும் 550 சதுர அடிகளைக்கொண்டதாக அமையப்பெற்றுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.எல்.நளீர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment