காற்று மற்றும் சூரியசக்தி ஆகியவை ஒரே சீராகக் கிடைக்காத வளங்களாகும். எனவே இந்த வளங்களில் இருந்து கிடைக்கும் சக்தி விநியோகம் எதிர்வுகூற முடியாதவையாகும். எவ்வாறாயினும் கோட்பாட்டளவில் இப்பிரச்சினையினை இலகு வாகத் தீர்க்கமுடியும். இதற்கான சிறந்த திட்டமாகவே சூரிய சக்தி முறைமை அல்லது காற்றிலிருந்து பெறும் சக்தி முறைமை ஆகியவை அறிமுகம் செய்யப்பட் டிருக்கின்றன. இதற்கான முயற்சிகளை விஞ்ஞான தொழில்நுட்பம் ஆராய்ச்சி அமைச்சுக்கு கீழ் இயங்கும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (Sri lanka sustainable Energy Authority) வழிநடத்தி வருகின்றது.
இதன் பணிகள் இன்று நாடாளவியரீதியில் வியப்பிக்கப்பட்டு மின்வலுவினைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையினைப் பெரிதாக்கி மிகையான சக்தியினைப் பின்னைய பாவனைக்காகக் களஞ்சியப்படுத்தி வைக்கும் திட்டங்கள்அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 250க்கும் மேற்பட்ட கம்பனிகள் இதனோடு தொடர்புபட்டு செயற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை (Sri lanka sustainable Energy Authority) யுடன் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (நைற்றா) புதிய ஒப்பந்தம் ஒன்றைக் கடந்த புதனன்று கைச்சாத்திட்டது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து நடத்தும் பயிற்சிகள் மூலமாக 2020ஆம் ஆண்டுக்குள்இ 10ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு இத்தொழில்துறையில் தொழில்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் நைற்றாவின் தலைவர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்ந்து கூறியதாவது இந்த பயிற்சித் திட்டம் மிகப்பாரியதும் நீண்டகாலப் பயன்களைத் தரக்கூடியதுமான ஒரு திட்டமாகும். இதன் செயலாக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள நைற்றா அலுவலக பயிற்சி நிலையங்கள் மூலமாக முன்னெடுக்கப்படும்.
முதலில் ஒன்பது மாதகால அடிப்படை கோட்பாட்டுப் பயிற்சிகள் இத்துறை சார்ந்த மிகத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இதன் பின்னர் தொழிலுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டு அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான சூரியசக்தி மின்சக்தி பூங்காவில் இறுதிப் பயிற்சிகள் வழங்கப்படும்.
தற்போது இத்துறைசார் பதவிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு பிரதான காரணமாக இருப்பது இத்துறை சார்ந்த தகமை கொண்டவர்கள் நம்மிடம் இல்லாது இருப்பதாகும்.
முதலில் இந்நிலையை மாற்றி அமைத்து நம்மவர்களுக்கு இத்துறைகளில் தொழில் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் இலக்கு பயிற்சிகளை பெற்று தொழில் வாய்ப்புகளைப் பெறுவோர் தாம் பெற்ற பயிற்சிகளை ஏனையவர்களுக்கும் பயிற்றுவிக்ககூடிய தகுதிகளை கொண்டவர்களாக உருவாக்கப்படுவர்.
இந்நிலையில் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தது 5000 ஆயிரம் பேர் வரை இதன் பயன்களை இவ்வாண்டு பெறுவர்- என்றார்.
மேற்படி ஒப்பந்தத்தில் விஞ்ஞான தொழில்நுட்பம் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் சிந்தக்க எஸ் லொக்குகெட்டிஇ நைற்றா தலைவர் நஸிர் அஹமட் மற்றும் பணிப்பாளர் நாயகம் பி.ஆர். றொட்ரிக்கோ பயிற்சிப் பணிப்பாளர் நிலந்த டி சில்வா இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் ரி.எம்.ஆர்.பங்சாஜெயத் மற்றும் பணிப்பாளாகளான சாமில ஜெயசேகர அத்துல ஜெயதுங்க ஆகியோரும் கைசாத்திட்டனர். நிகழ்வில் போராசிரியர்கள் அமைச்சு மற்றும் அதிகார சபைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment