தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பரீட்சைகள் திணைக்களம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதற்கமைய பரீட்சைக்குரிய சுட்டிலக்கம், மாணவர்களின் வெள்ளை சீருடையின் வலது பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வினாக்களுக்கு விடையளிக்க பென்சில், கறுப்பு அல்லது நீல நிற பேனைகளை பயன்படுத்த முடியும்.
பரீட்சை எழுதும் மாணவர்கள், காலை 9.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும்.
மற்றும் பரீட்சை நிலையத்தில் பெற்றோர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, பரீட்சைகள் திணைக்களம் இன்று (01) தெரிவித்தது.
எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2,995 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, 3 இலட்சத்து 39 ஆயிரத்து 360 மாணவர்கள் ( 339,360) பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
No comments:
Post a Comment