கொட்டாஞ்சேனை, சிறில் சீ பெரேரா மாவத்தையின் வாசல வீதி சந்தியிலிருந்து வோல்ஸ் ஒழுங்கை சந்தி வரையான பாதை 03 நாட்களுக்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கை காரணமாகவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய எதிர்வரும் 02 ஆம், 09 ஆம், 16 ஆம் திகதிகளில் (வெள்ளிக்கிழமை) இரவு 9.00 மணி முதல் திங்கட்கிழமை (05, 12, 09 ஆம் திகதிகளில்) அதிகாலை 5.00 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
குறித்த தினங்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரின்ஸஸ் வேல்ஸ் வீதி வழியாக இங்குரு கடே, தொட்டலங்க சந்தி ஊடாக மாதம்பிட்டி திசை நோக்கி பயணிக்க முடியும்.
அல்லது, ஹெட்டியாவத்தை சந்தியில் அளுத் மாவத்தை வழியாக அரசமர சந்தி ஊடாக பயணிக்க முடியும் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment