நான்கு மணி நேர சோதனை நடவடிக்கைகளில் 3,265 பேர் கைது - 4,667 போக்குவரத்து விதி மீறல் வழக்கு பதிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

நான்கு மணி நேர சோதனை நடவடிக்கைகளில் 3,265 பேர் கைது - 4,667 போக்குவரத்து விதி மீறல் வழக்கு பதிவு

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர விசேட சோதனை நடவடிக்கைகளில் 3,265 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 4,667 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றங்களை தடுக்கும் நோக்கில், இன்று (31) அதிகாலை 2.00 மணி முதல் காலை 6.00 மணி நேரம் வரையான 4 மணி நேரம் நாடு முழுவதும் குறித்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறித்த நடவடிக்கையில் 14,695 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விபரம்
போதையில் வாகனம் செலுத்தியோர் கைது - 401

பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் கைது - 1,080

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது - 635

ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட கைது - 882

அனுமதிப்பத்திரம் இன்றி அரசாங்க மதுபானங்களை விற்றல், பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட விடயங்களில் கைது - 135

போக்குவரத்து வழக்குகள் - 4,667

குற்றங்களை தடுப்பது தொடர்பில், நாடு முழுவதும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

No comments:

Post a Comment