மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் விருத்தி பயிற்சிநெறி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் விருத்தி பயிற்சிநெறி

எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிருவாகிகளுக்கு திறன் விருத்தி பயிற்சிநெறியொன்று (29) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு YMCA நிறுவனத்தினால் CBM மின் நிதி உதவியோடு நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் கலந்து கொண்டன.

இதில் வளவாளராக உளவள ஆலோசகர் சொர்ணலிங்கம் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். இப்பயிற்சி நெறியில் ஓட்டமாவடி பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக், (ஸஹ்வி) செயலாளர் எஸ்.எல்.ஸாஜஹான் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment