14 வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்தி வந்த 22 வயது இளைஞன் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்தி வந்த 22 வயது இளைஞன் கைது

14 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்தி வந்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். 

இவர் நிக்கவெரட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவ்விளைஞரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிக்கவெரட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நிக்கவெரட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர், ஜாஎல பிரதேசத்தில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அப்பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை ஏமாற்றி நிக்கவெரட்டியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ள சந்தேக நபர் அங்கு அச்சிறுமியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

இதன் காரணமாக குறித்த சிறுமி தனது பாடசாலைக் கல்வியையும் இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிக்கவெரட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment