தாய் - மகன் கொலையின் சூத்திரதாரி சிக்கினார் - கைத்தொலைபேசி, கம்பி ஒன்றும் கிணற்றிலிருருந்து மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

தாய் - மகன் கொலையின் சூத்திரதாரி சிக்கினார் - கைத்தொலைபேசி, கம்பி ஒன்றும் கிணற்றிலிருருந்து மீட்பு

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலையின் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொலை சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (30) அதிகாலை கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, சந்தேகநபர் தானே கொலையாளி என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வீட்டாருடன் தனக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பபட்டதாகவும் அதனால் அவர் தன்னை தாக்கியமையால் அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று (30) அதிகாலை ஒன்று முப்பது மணியளவில் அவரின் வீட்டுக்குள் புகுந்து கம்பி ஒன்றினால் தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், குற்றத் தடயவியல் பொலிசார் இணைந்து, சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் அருகிலிருந்த கிணற்றை இறைத்து சோதனை செய்த போது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என். நிபோஜன்

No comments:

Post a Comment