தற்போதைய நிலையில் எந்த அரச பதவியையும் ஏற்கும் அக்கறை எனக்குக் கிடையாது. ஆனால், ஜனாதிபதி வழங்கும் எந்தப் பதவியையும் ஏற்று செயற்படத் தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
'பெற்றிகலோ கெம்பஸ்' தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று கொழும்பு குயீன்ஸ் கெபேயில் நடைபெற்றது. பதவி விலகிய சில அமைச்சர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை ஏற்றுள்ள நிலையில், மீண்டும் ஆளுநர் பதவியை ஏற்கத் தயாரா என வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,
எமக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பொய்யென்பது நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், சில அமைச்சர்கள் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர். மீண்டும் ஆளுநர் பதவி ஏற்குமாறு எந்த அழைப்பும் வரவில்லை.
நான் தொடர்ந்து ஜனாதிபதி தரப்புடனே இருக்கிறேன். மீண்டும் ஆளுநர் பதவியை வழங்கினால் ஏற்க தயாராக உள்ளேன். அல்லது வேறு பதவிகள் வழங்கினாலும் அதனையும் ஏற்று பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment