வவுனியா சிறையிலுள்ள ஏழு இந்திய மீனவர்களை பார்வையிட்ட அனந்தி சசிதரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

வவுனியா சிறையிலுள்ள ஏழு இந்திய மீனவர்களை பார்வையிட்ட அனந்தி சசிதரன்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரினது விடுதலையைத் துரிதப்படுத்தவதற்காகவும் ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் நேற்று வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 7 பேரையும் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறும் போது,

கடந்த (27.07.2019) அதிகாலை தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற படகை முற்றுகையிட்ட இலங்கைக் கடற்படையினர் அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து இலங்கைக்குக் கொண்டுவந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment