காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவை டின்சின் கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரை இன்று (31) அதிகாலை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இது தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொகவந்தலாவைபொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பொகவந்தலாவை மோரா தோட்டப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இச்சந்தேக நபர்களுக்கு பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்.கிருஸ்ணா
No comments:
Post a Comment