ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரித்து விதித்திருந்த சுற்றுலாப் பயணத் தடையை ஜப்பான் அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான விடயங்களை கவனத்திற்கொண்டு இந்த தடையை தளர்த்தியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பான் அரசாங்கம் விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனைத் தடையை தரம் 1 க்கு குறைந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இலங்கையில் இருக்கும் தருணத்தில் ஜப்பான் நாட்டவர்கள் போதுமான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கையை அடுத்து சீனா, இந்தியா, அமெரிக்கா, சுவீடன், ஜேர்மனி, சுவிஸர்லாந்து போன்ற நாடுகள் பயணத் தடையை தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment