கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கே.எச்.சுஜீத் பிரியந்த கடமையேற்றார்.
இந்த கடமையேற்பு நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
சமயத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கடமையேற்பு நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், சமய தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி, நாரேன்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், “கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி இன, மொழி பேதமின்றி பாகுபாடுகளைக் கடந்து நெறி பிரளாது இந்த பிரதேசத்து மக்கள் சட்டத்தின்படி வாழ நெறிப்படுத்தியவர்.
அவரது சேவை எமது நாட்டிற்கு தேவை. சமூகத்தின் பிணக்குகளை களைய எமது பிரதேசத்தில் கடினமாக உழைத்தவர்” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment