ரிசாட் விடயத்தில் பொய்யுரைக்கிறார் இராணுவ தளபதி : உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 2, 2019

ரிசாட் விடயத்தில் பொய்யுரைக்கிறார் இராணுவ தளபதி : உதய கம்மன்பில

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடயத்தில் இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க பொய்யுரைக்கிறாரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது, “தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு மன்னாரிலுள்ள பிரபல அமைச்சர் ஒருவர் தமக்கு அழுத்தத்தை பிரயோகித்ததாக மகேஸ் சேனாநாயக்க ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று தாக்குதலுக்கு காரணமான சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு ரிசாட் தொலைபேசி ஊடாக கோரியதாககவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை ரிசாட் கோரிய போது ஒரு வருடத்திற்கு பின்னர் வழங்குகிறேன் என தான் கூறியதாக மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இவ்விடயங்கள் குறித்து வேறு விதமான பதில்களையே அவர் வழங்கியுள்ளார். இத்தகைய விடயங்களை அவதானிக்கும் போது, மகேஸ் சேனாநாயக்க பொய்யுரைத்துள்ளார் என்பது உறுதியாகின்றது” என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment