இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத ஒரு பணத் தொகையினை இந்த 5 வருட காலத்திற்குள் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கி செலவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 3, 2019

இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத ஒரு பணத் தொகையினை இந்த 5 வருட காலத்திற்குள் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கி செலவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத ஒரு பணத் தொகையினை இந்த 5 வருட காலத்திற்குள் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கி செலவு செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஹம்பாந்தோட்டை, சிரிபோபுரவில் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (01) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந் நிகழ்வில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சா் டொக்டர் ராஜித சேனாரத்ன, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜொன்னே தூர்நெவாட், பிரதி அமைச்சர் திலிப் வெதஆரச்சி உட்பட பாராளுமன்றஉறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 

எமது நாட்டின் கல்வி, உயர் கல்வி துறைக்கும் நாம் பெருந்தொகையான நிதியை செலவு செய்திருக்கிறோம். அதேபோல் சிறந்த சுகதேகிகளை உருவாக்குவதற்காக இலவச சுகாதார சேவைகளையும் அரசாங்கம் வழங்கி வருகின்றதை நான் பாராட்டுகிறேன். 

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்பே இன்று திறந்து வைக்கிறோம். சுகாதார அமைச்சர் இதனை விபரமாக தெளிவுபடுத்தினார். 

மூன்று வருட காலத்தில் ஒப்படைக்க வேண்டிய வைத்தியசாலையினை ஏழு வருடங்களின் பின்பே திறந்து வைக்கிறோம். 

நான் இது தொடர்பாக கதைக்க விரும்பவில்லை. இதையும் நுவரெலியா வைத்தியசாலையினையும் பெற்றுக்கொள்வதற்கு நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது மேற்கொண்டமுயற்சிகளை நான் அறிவேன் என்றார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

No comments:

Post a Comment