ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒருபோதும் நாட்டு மக்களை ஏழைகளாக வைத்திருக்காது என ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல், நலன்புரி அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகளாக புதிதாக 6 இலட்சம் பேரை அரசாங்கம் இணைத்துள்ளது. நாட்டில் ஏழைகள் அதிகரித்துள்ளனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர், ஏழ்மையை நாட்டில் இல்லாமல் செய்யும் நோக்கிலேயே சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாகக் கூறினார்.
சமுர்த்தி வீடமைப்பு லொத்தர் காசோலைகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
சமுர்த்தி பயனாளிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் அடிப்படையற்றவை.
ஐக்கிய தேசியக் கட்சி தூரநோக்குடன் சிந்தித்து ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் கடந்த காலத்திலும் எதிர்க்கட்சியினரால் மோசமாக விமர்சிக்கப்பட்டவைதான்.
இருந்தபோதும் அவையாவும் வெற்றியாக அமைந்துள்ளன. ஐ.தே.க அரசாங்கம் நாட்டில் ஒருபோதும் ஏழ்மையை அதிகரிக்காது. மாறாக ஏழ்மையில் உள்ள மக்களை அதிலிருந்து மீட்டு பலம்மிக்கவர்களாக மாற்றும் என்றார்.
மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment