அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சந்தேக நபர் இன்று (02) அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி மாலை 5 மணியளவில் சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்திருந்தார்.
அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 30 வயதான கசுன் சம்பத் எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் இன்று ஊருமுத்த - உடகந்த பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த குறித்த நபர் அகுரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த லொகுகே தர்மசிறி (56) என்பவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment