மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு : ஓட்டமாவடியில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு : ஓட்டமாவடியில் சம்பவம்

எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 51 வயதுடைய நூர் முகம்மட் மீராமுகைதீன் என்பவர் மீன்பிடி தொழிலை செய்து வருபவர் அவர் அன்று வழக்கம் போன்று காவத்தமுனை ஊடாகச் செல்லும் ஓட்டமாவடி ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது அந்நபர் தண்ணீரில் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்ட சிலர் உடனடியாக அவரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மரணமடைந்த நபர் வலிப்பு நோயுடையவர் என்று தெரியவந்துள்ளதோடு இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment