நான் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவில்லை! - ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

நான் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவில்லை! - ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக பரவும் செய்தியில் உண்மையில்லை என ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சற்றுமுன் தெரிவித்தார்.

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தன்னிடம் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், நீங்கள் விரும்பினால் இராஜினாமா செய்யலாம் எனவும் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூக தலைவர்கள், ஜம்இய்யா உள்ளிட்ட தரப்புகளுடன் ஆலோசனை பெற்ற பின்னர்தான் இது தொடர்பில் தீர்மானிப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஜனாதிபதி செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் பெரும்பான்மை செய்தித் தளங்கள் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment