திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் பாலம் போட்டாறு பகுதியில் இன்று (29) இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை - முத்துநகர் பாலம் போட்டாறு பகுதியைச் சேர்ந்த சதுன் மதுசங்க (12) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
தனது சகோதரருடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தபோது, திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிமோ பட்டா ரக வாகனம் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment