மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்! - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2019

மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் மீண்பிடியில் ஈடுபட்ட மீனவரின் வலையில் பாரிய மீனொன்று சிக்கியுள்ளது. தொழிலுக்காக நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வலை விரித்தபோதே குறித்த மீன் அதில் சிக்கியுள்ளது.

இரணைமாதா நகரில் வசித்துவரும் மனோகரசீலன் என்பவரது வலையில் சிக்கிய குறித்த மீன், ஏறத்தால 4000 கிலோ எடை கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடல் பரப்பில் இவ்வாறு பெரிய மீன் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு, இந்த மீனை பார்வையிட மக்கள் ஆர்வத்துடன் வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மீன் தொடர்பாக நீரியல் வள திணைக்களம் ஆய்வு செய்ததன் பின்னரே, மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என முழங்காவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment