ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் ஸாலி மற்றும் அமைச்சர் றிஷாத் தாமாக இராஜினாமா செய்ய வேண்டியதில்லை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் ஸாலி மற்றும் அமைச்சர் றிஷாத் தாமாக இராஜினாமா செய்ய வேண்டியதில்லை

இந்த நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள் இருக்கின்றன.

பொளத்த தர்மத்தைப் பாதுகாக்க உத்தியோக பூர்வமான நான்கு மதகுருபீடங்கள் இருக்கின்றன.

சிங்கள இனத்தைப் பாதுகாக்க 70% மக்களும் புத்திஜீவிகளும் இருக்கின்றார்கள்.

அரசியல் உள்நோக்கங்களுடன் அரசியல்வாதி பிக்கு ஒருவரும், அரசியல் அதிகார பொதுமன்னிப்பு பெற்று சிறைமீண்ட பிக்கு ஒருவரும் மேற்கொள்ளும் அச்சுறுத்தலுக்காக ஒரு சமூகத்தின் பிரதிநதிகள் தாமாக இராஜினாமா செய்வது பிழையான முன் உதாரணமாகும்.

இந்த மூவரினதும் தனிப்பட்ட அரசியலுக்கு அப்பால் இந்த இந்த விடயத்தை நாம் அணுக வேண்டும்.

நாளை இன்னுமொரு மற்றுமொரு பிக்கு முஸ்லிம் விரோத கோரிக்கையுடன் நோன்பிருக்கலாம், இது எங்கு போய் முடியும்?

நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் அவர்கள் விடயத்தில் முடிவை எடுத்து வைத்திருப்பதா அல்லது விலக்குவதா என்பதனை தீர்மானிக்கட்டும்.

தேவைப்படின் மூவரும் முஸ்லிம் சிவில் தலைமைகளையும் கலந்தாலோசிக்கட்டும்.

ஜனாதிபதி பிரதமர் இணங்கும் பட்சத்தில் இவர்கள் மாத்திரம் நீங்காது பாராளுமன்றில் மூன்றில் இரு பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தி காபந்து அரசின் கீழ் பொதுத்தேர்தலை நடத்துங்கள்.

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம்களை தொடர்ந்தும் பலிக்கடா ஆக்காதீர்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

No comments:

Post a Comment