ஜப்பான் நாட்டு யென் நாணயத் தாள்களை இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு கொண்டுசெல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களில் பணியாற்றும் 38 வயதுடைய ஜப்பான் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (சனிக்கிழமை) ஜப்பான் நோக்கிப் பயணிக்கவிருந்த குறித்த பிரஜையின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது அவற்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பது இலட்சம் ஜப்பான் யென் (இலங்கை மதிப்பில் 81 இலட்சத்து 30ஆயிரத்து 500 ரூபாய்) நாணயத் தாள்களைக் கைப்பற்றியதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சமன் ரணவக்கவின் உத்தரவில் இதுகுறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment