உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இனியும் இடம்பெறாத வகையில், அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமா என்ற கேள்வியே தற்போது எம் அனைவருக்கும் எழுந்துள்ளதென ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் முன்னாள் தலைவரான ஓமால்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை, ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் முன்னாள் தலைவரான ஓமால்பே சோபித தேரர் நேரில் சென்று சந்தித்திருந்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எமக்கு இந்த விடயத்தில் ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகின்றது. அரசாங்கம் வாளை வைத்துக்கொண்டு கொம்பை மட்டும் பயன்படுத்தி சண்டை செய்வதால், எமக்கு இந்த விவகாரத்தில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.
இஸ்லாம் அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழித்தொழிக்க சில ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விவகாரம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து முடிவொன்றை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், இந்த மூவரையும் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment