அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணா விரத போராட்டங்கள் நிறைவுக்கு வந்தன.
ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து இந்த போராட்டங்கள் இன்று (03) மாலை முடிவுக்கு வந்தன.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர் அமைப்பினால் மூன்றாவது தினமாகவும் இன்றும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்ட நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து தமது உண்ணாவிரத போராட்டத்தினை முடித்துக்கொள்வதாக டிலக்ஸன் அறிவித்தார்.
அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்னம், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே. மோகன் ஆகியோர் நீர் வழங்கி போராட்டத்தினை நிறைவு செய்தனர்.
இதே போன்று மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர் அமைப்பினால் மூன்றாவது தினமாகவும் இன்றும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டுவந்த உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டது.
தெகியத்தன்கண்டிய விகாரையில் இருந்து வருகை தந்த பிக்குகளினால் அனுசாசனம் ஓதப்பட்டு வியாழேந்திரனுக்கு நீர் வழங்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இன்றைய போராட்டத்தில் பெருமளவான புத்த பிக்குகள் கலந்துகொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment