அரசில் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் கூட்டாகத் துறப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல்லத்தில் இன்று காலை நடந்த கூட்டம் ஒன்றையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ள அவர்கள், இதுகுறித்து தற்போது அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.
அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் ஆளுநர்மார் இவ்வாறு பதவிகளைத் துறந்தாலும் அவர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அங்கு அவருக்கு ஆதரவாக சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், மேற்படித் தீர்மானத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்துள்ளனர்.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment