பல்வேறு வகை அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை 2125/66 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
அதன்படி வெள்ளை சம்பா (அவித்த அல்லது வேகவைத்த) அரிசியின் அதிகபட்ச விலை ஒரு கிலோவுக்கு 85 ரூபாவாகும்.
வெள்ளை நாடு மற்றும் சிவப்பு நாடு (அவித்த அல்லது வேகவைத்த) அரிசியின் அதிகபட்ச விலை ஒரு கிலோவுக்கு 74 ரூபாவாகும்.
கடந்த மே 31ம் திகதி முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வருகிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்டத்தின் (2015) ஆம் பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தின்படி எந்தவொரு உற்பத்தியாளரோ விநியோகத்தரோ அல்லது வர்த்தகரோ மேலே கூறப்பட்ட அரிசி வகைகளை குறிப்பிட்ட அதிக பட்ச விலைக்கு மேல் விற்கக் கூடாது என்று வர்த்தமானி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment