பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (03) ஹட்டன் நீக்ரோ தாறாமே விகாரையில் பிரதான தேரர் மாகம விமலஹிமி தேரர் தலைமையில் பேரணி ஒன்று நடைபெற்றது.
மேலும் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள புத்த பகவானுக்கு விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. இந்த பேரணியில் தமிழ், சிங்கள மக்கள் பாதாதைகளை ஏந்தி பேரணியை முன்னெடுத்ததோடு ஹட்டன் நகரில் வர்த்தக நிலையங்களும் முடப்பட்டிருந்தது.
காலை 10.30 மணிக்கு குறித்த பேரணி ஆரம்பமானது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் கோரிக்கையினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவருடைய உண்ணாவிரதம் வெற்றி பெற வேண்டும் எனவும் ஆசி வேண்டி விஷேட பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
இதேவேளை, ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இவர்களை பதவி நீக்கம் செய்யும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment