தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் இப்தார் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் இப்தார் நிகழ்வு

எஸ்.எம்.எம். முர்ஷித்
கல்குடா தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

கல்குடா தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எச்.எம். கபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, கல்குடா உலமா சபைத் தலைவர் மௌலவி. ஏ.எல். இஸ்மாயில், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். பதூர்தீன், எஸ். ஹாமீது லெப்பை, மீராவோடை வர்த்த சங்கத் தலைவர் வீ.ரீ. இஸ்மாயில் (மஜீத்), தச்சுத் தொழிலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment