அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அங்கு அவருக்கு ஆதரவாக இன்று காலை தொடக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் பிக்குகள் மற்றும் சிங்கள அமைப்புகள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அஸாத் ஸாலி ஆகியோரைப் பதவி நீக்குவதற்கு ஞானசார தேரரால் அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதால் கண்டியில் பெரும் பதற்றமான நிலையேற்பட்டுள்ளது.






No comments:
Post a Comment