உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலியே ரதன தேரரின் சுகம் விசாரிப்பதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று அவ்விடத்திற்கு செண்டிருந்தார்.
அதேவேளை தேரரை சுகம் விசாரிப்பதற்கு முன்னர் உண்ணாவிரதத்திற்கான காரணம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ரதன தேரர் மற்றும் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவது அவசியமாகும் என அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைத்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment