கடந்த காலங்களை விட நாட்டில் இலஞ்ச, ஊழல் குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துள்ளது - முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 3, 2019

கடந்த காலங்களை விட நாட்டில் இலஞ்ச, ஊழல் குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துள்ளது - முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட்

நாட்டில் தற்போது சிறந்த தலைமைத்துவம் இல்லை என்று தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கடந்த காலங்களை விட நாட்டில் இலஞ்ச, ஊழல் குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் நிலவிய யுத்தத்தை எக்காலத்திலும் நிறைவுக்குக் கொண்டு வர முடியாது என்றும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது என்றும் கூறினார்கள்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஒன்றிணைந்து, யாராலும் முடியாத விடயத்தை வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளார்கள். இதுதான் தலைமைத்துவத்தின் விசேட பண்பாகும்.

ஆனால், இதனை தற்போது எம்மால் காண முடியாதுள்ளது. இதனால்தான் தற்போது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் இல்லாது போயுள்ளது. மக்களுக்கு தமது எதிர்காலத்தை நினைத்து பயமும் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள தலைவர்கள் அனைவரும் தம்மால் முடிந்த அனைத்து தவறுகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால், எமது நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் வலுவிழந்த நிலையில் இருப்பதாகவே, சர்வதேசத்தினரால் கருதப்படுகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment