எஸ்.எம்.எம்.முர்ஷித்
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவற்தோட்ட விஷ்ணு இளைஞர் கழகத்திற்கு காணிக் கொள்வனவுக்கு நிதி கையளிக்கும் நிகழ்வு பொதுக் கட்டடத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட இணைப்புச் செயலாளர் எஸ்.லோகநாதன் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது இராஜாங்க அமைச்சரால் கழகத்திற்கு காணிக் கொள்வனவுக்கான நிதி கழகத்தினரிடம் கையளித்தார்.
இராஜாங்க அமைச்சரின் இன, மத பேதமற்ற சிறப்பான சேவையைப் பாராட்டி விஷ்ணு இளைஞர் கழகத்தி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment