பாகிஸ்தானுக்கான விமான சேவை 04ம் திகதி வரை இரத்து - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

பாகிஸ்தானுக்கான விமான சேவை 04ம் திகதி வரை இரத்து

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான விமான சேவை எதிர்வரும் 04ம் திகதி திங்கட்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது. 

கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களிலுள்ள விமான நிலையங்களை தவிர்த்து மற்றனைத்து பாகிஸ்தானின் வான் மார்கங்களிலும் வரும் மார்ச் 4ஆம் திகதி வரை விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்றுவரும் போர்ச் சூழல் காரணமாக பாகிஸ்தான் இந்நடவடிக்கை​யை எடுத்துள்ளது. 

பாகிஸ்தான் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த விடயம் தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்தபோதிலும், பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment