எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவந்தீவு மீனவர்களுக்கு வீச்சு வலைகள் வழங்கும் நிகழ்வு மீனவர் சங்க கட்டடத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நாசீவந்தீவு மீனவ சங்கத் தலைவர் எஸ்.ஜெயானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், நாசீவந்தீவு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், நாசீவந்தீவு மாதர் சங்க தலைவர் திருமதி.எஸ்.பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நாசீவந்தீவு கிராமத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் ஐம்பத்தி இரண்டு மீன்பிடியாளர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வீச்சு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
நாசீவந்தீவு மீனவ சங்கத்தினர் பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசனிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பின் நிதி உதவி மூலம் வீச்சு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment