தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி ஆரம்பம்

எச்.எம்.எம்.பர்ஸான்
ஓட்டமாவடி - தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையை கல்லூரியின் நிருவாக உத்தியோகத்தரும் உளவளத்துனை ஆலோசகருமான அஷ்ஷெய்க் ஏ.எல். முஸ்தபா ஸலாமி நிகழ்த்தினார்.

அதில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளின் அவசியம், அதன் நன்மைகள் பற்றிய மாணவா்களுக்கு விழிப்பூட்டப்பட்டது.

இதில் தொடா்ந்தும் கல்லூரியின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆா்.எம். புஹாரி அவா்களது உரை நடைபெற்றது, அதில் விளையாட்டுத் தொடா்பான சட்டதிட்டங்கள், விதிமுறைகள் போன்றவைகள் தெரிவிக்கப்பட்டு மாணவா்களுக்க அறிவுரைகள் முன்வைக்கப்பட்டது.

நிகழ்வுகளை கல்லூரியின் பிரதி அதிபா் அல்ஹாபிழ் ஏ.எச்.எம். இா்பான் (நஹ்ஜி) அவா்கள் தொகுத்து வழங்கினார்.

இவ் முதல்நாள் நிகழ்வில் ஆசிரியா்கள், நிருவாகிகள் மற்றும் பழைய மாணவா்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment