ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன், அல்கொய்தா அமைப்பின் அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளதாக ஐ.நா பாதுகாப்பு பேரவை எச்சரித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு பேரவையின் தடைப்பட்டியலிலும் ஹம்ஸா பின்லேடன் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருக்கும் அய்மான் அல் ஜவாஹிரிக்கு அடுத்தாற்போல் ஹம்ஸா பின்லேடன் அந்த அமைப்புக்கு தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் அறிவிப்போருக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இதற்கிடையே சவுதி அரேபியாவும் ஹம்ஸா பின்லேடனுக்கு வழங்கியிருந்த குடியுரிமையை இரத்து செய்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா பாதுகாப்பு பேரவையின் ISIS மற்றும் அல்கொய்தா தடைக்குழுவின் பட்டியலில், 29 வயதான ஹம்ஸா பின்லேடனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு பேரவை வெளியிட்ட அறிவிப்பில், அல்கொய்தாவின் தலைவர் அல் ஜவாஹிரி வெளியிட்ட அறிவிப்பில், சவுதி அரேபியாவில் பிறந்த ஹம்ஸா பின்லேடன் அல்கொய்தா அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். தீவிரவாத செயல்களில் இனிமேல் ஹம்ஸாவும் ஈடுபடுவார்.
அல் ஜவாஹிரிக்கு அடுத்தாற்போல் அந்த அமைப்புக்குத் தலைவராகவும் ஹம்ஸா வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆதலால், ஹம்ஸா பின்லேடனின் சொத்துக்களையும் நிதி ஆதாரங்களையும் பொருளாதார விடயங்களையும் முடக்குவது அவசியமாகும். மேலும் எந்த நாட்டிற்குள்ளும் ஹம்ஸா பின்லேடன் செல்லாதவாறு தடையும் விதிக்கப்படுவது அவசியமாகும். என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment