கினிகத்தேன பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் கினிகத்தேன பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யபட்டுள்ளார்.
கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த சநதேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.
அத்துடன் விற்பனைக்கு வைக்கபட்ட 24 மதுபான போத்தல்களையும், கார் ஒன்றையும் கைபற்றியுள்ளதாக கினிகித்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட சந்தேகநபர் நீண்ட காலமாக இது போன்ற சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment