வடக்கு கிழக்கு மக்களின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் - அமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

வடக்கு கிழக்கு மக்களின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் - அமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வடக்கு கிழக்கு மக்களின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூட கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் இன்றையை நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுவதை கண்டேன். வடக்கு கிழக்கில் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். நமது பிரதேசத்தின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனது கல்விக் காலத்தில் பாடசாலைக் கீதம் இல்லை, கிராத் ஓதியதும் தேசிய கீதத்தினை அக்காலத்தில் தமிழில் பாடினோம். இந்த சந்தர்ப்பம் மீண்டும் இந்த அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் தமிழில் பாட முடியும் என்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதனையொட்டி எமது மாணவர்களுக்கு தேசிய கீதத்தினை கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. முன்னைய காலத்தில் இருப்பவர்களுக்கு தேசிய கீதம் தமிழில் படிப்பதற்கு பாடம். ஆனால் இப்போது உள்ள மாணவர்களுக்கு சிங்களத்திலும், தமிழிலும் படித்தற்கு தெரியாது என்று சொன்னால் தேசிய கீதத்திற்கு அநியாயம் செய்து விட முடியாது.

எமது நாட்டுப்பற்றை, இறையான்மையை ஓரளவுக்காவது வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தேசிய கீதம் படித்துக் கொள்ள வேண்டும். தேசிய கீதம் பாடும் போது எல்லோரும் பாடுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் பிரச்சனைகள், சிக்கல்கள், சருக்கல்கள் நிறைய இருந்த பொழுதிலும் அரசாங்கம் கல்விக்காக, பிரதேச அபிவிருத்திக்காக பல கோடிக் கணக்கான மில்லியன் ரூபாய்களை மாவட்டம் முழுவதும் வழங்கி வேலைத் திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்று அதிகம் விரும்பது போல இந்த அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றது என்றார்.

பாடசாலை அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜௌபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கட்டமானது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட கட்டடத்தில் நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், கணனி கூடம் என்பன அடங்குகின்றது.

No comments:

Post a Comment