கிழக்கில் தற்போது கால்நடைகளின் இறப்பு அதிகரித்துள்ளது. இதற்கு நோய்த் தொற்றுக் காரணமாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகக் கால்நடை வளர்ப்பின் மூலமாகப் பண்ணைத் தொழிலைச் செய்து வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, இந்த நோயைக் கட்டுப்படுத்த கால்நடை அமைச்சு நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும் எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது கிழக்கைப் பொறுத்த வரையில் பிரதான தொழில்களில் ஒன்றாக கால்நடை வளர்ப்பு தொழில் இருக்கின்றது. இதனைப் பண்ணைத் தொழிலாளாகக் கொண்டு பலரும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது கால்நடைகள் நோய்த் தொற்றுக் உள்ளாகி இறந்து வருகின்றன. இதனால் கால்நடை பண்ணையை நடத்தி வந்த பலரும் பெரும் பாதிப்புகளை அடைந்துள்ளனர்.
அத்துடன் தனிப்பட்ட முறையில் கால்நடைகளை வளர்த்து வந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக் குறித்து தீவிர கவனம் செலுத்தி இதனை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஹரிசனின் கவனத்திற்கு முன் வைத்திருக்கின்றேன்.
அத்துடன் தற்போது கால்நடை இறப்புகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் கிழுக்கு மாகாண ஆளுநர் கவனம் கொண்டு செயற்படுவது பாராட்டுக்குரியது என்றார்.
No comments:
Post a Comment