சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் கிழக்குப்பல்கலைக்கழக நான்கு மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 5, 2019

சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் கிழக்குப்பல்கலைக்கழக நான்கு மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்

கட்டார் நாட்டில் நடைபெறவிருக்கின்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித்துறை மாணவர்கள் நான்கு பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டி கட்டார் ஹமாட் இப்னு கலீபா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 15 ஆம் திகதி (2019/03/15-21) நடைபெறவிருக்கிறது. இதில் கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித்துறை மாணவர்களான ஏ.ஜீ.எம்.வஸீம் மீஸானி (கஹடகஸ்திகிலிய), டி.எம்.இம்றாஸ் நஹ்ஜி(ஏறாவூர்), என்.எப்.ஆகிபா (குருநாகல்), ஏ.எப்.ஸல்மா (குருநாகல்)ஆகிய நான்கு பேர்களும், அரபு மொழித்துறைத் தலைவர் கலாநிதி பீ.எம்.ஹம்தூன் தலைமையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அரபு மொழியை முதலாம் மொழியாகக் கொண்ட நாடுகள், அரபு மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்ட நாடுகள் என போட்டிகள் இரு பிரிவுகளாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கட்டார் நாட்டில் அரபு மொழிமூலம் நடைபெறுகின்ற விவாதப் போட்டிக்கான சர்வதேச பயிற்சி நெறியில் கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித்துறைத் தலைவர் கலாநிதி பீ.எம்.ஹம்தூன் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

MOHAMED WASEEM

No comments:

Post a Comment