திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல பாதாளக் குழு உறுப்பினரான புளூமென்டல் சங்க, தமிழகத்தின் இராமேஷ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளூமென்டல் சங்கவுடன் சந்தேகநபருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராமேஷ்வரத்திற்கு படகு மூலம் சென்றபோதே, சந்தேகநபர்கள் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment