இலங்கை - தென்னாபிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் இன்று - News View

About Us

About Us

Breaking

Saturday, March 2, 2019

இலங்கை - தென்னாபிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் இன்று

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.

ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெறும் போட்டி, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 7 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி, தென்னாபிரிக்காவில் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இதுவரை 74 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், 31 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தென்னாபிரிக்க மண்ணில், இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியதில்லை.

No comments:

Post a Comment