நடுக்கடலில் சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் மீட்பு - News View

About Us

Add+Banner

Friday, February 1, 2019

demo-image

நடுக்கடலில் சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் மீட்பு

1549021008-beruwala-2
மீன்பிடி நடவடிக்கைக்காக சென்றிருந்த வேளையில் சுகயீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு இன்று (01) கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். 

இம் மீனவர் கடந்த ஜனவரி 01 ஆம் திகதி ´வத்சலா´ மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைக்காக பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. 

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகயீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டுவருவதற்காக தென் கடற்படை கட்ளையின் அதிவேக தாக்குதல் படகொன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது. 

அதன்படி காலி கலங்கரை விளக்கத்துக்கு 172 கடல் மைல்கள் தூரத்தில் சர்வதேச கடலில் இருந்து குறித்த மீனவர் பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு கப்பல் உரிமையாளருக்கு ஒப்படைக்கப்பட பின் மீனவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, கடந்த ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மக்களை காப்பாற்றவும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரவும் கடற்படையினர் செயல்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *