பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. 

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணி ஒன்றில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை வழங்குவதற்காக ஜெராட் மெண்டிஸ் எனும் வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா நிதி கேட்டு அச்சுறுத்தியதாக மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய விசாரணையின் போது வழக்கின் பிரதான சாட்சியாளரான ஜெராட் மெண்டிஸ் என்பவரிடம் சாட்சி பதிவு மேற்கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் மாதம் 14ம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் பிற்போடப்பட்டுள்ளது. 

இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான நரேஷ் பாரிக் என்பவர் தற்போது வௌிநாட்டில் இருப்பதால் அவர் இன்றி இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment